you are

நீங்க இங்க வந்த தமிழ் மனிதன் hit counters

.

சங்க காலத் தமிழ் இப்படி ஆயிருச்சேன்னு யாரும் வருத்தப்படாதீங்க.

திங்கள், 14 செப்டம்பர், 2009

the place of tamil sangam


In the earlier stages. TamilNadu ruled by three kings namely Chera, Chola and Pandiyas. From 1000 B.C to 250 A.D, the Tamil Scholars formed a literary academy called “Tamil Sangam”. The three kings were the patrons of the poets. Among the three, Pandiyas were the kings who founded this “sangam”. The first, Middle and the last sangam were considered to be the Golden period of Tamil language and literature. Because of the new religions and presence of strangers, no new Tamil Sangam was started. During the reign of British rulers Tamil Language and Literature were ruined. There were no patrons to encourage Tamil poets and scholars. But there were no organised and formulated Tamil Sangms. during this period, very few zamindars or local chieftains helped Tamil Scholars. Among them the “Sethupathis” of Ramnadu kings are most benevolent. 

Once King Bharskara Sethupathi wanted to start a new Tamil Sangam in his life but it remained unfulfilled. Then Pandithurai Thevar, the nephew of Bhaskara Sethupathi established Madurai Tamil Sangam. Both of them helped a lot to Tamil scholars and Freedom fighters. Pandithurai Thevar had a circle of scholar-friends and he had literary discussions. In that situation he had decided to start Madurai Tamil Sangam. He donated his summer palace at Madurai town to the exclusive use of the Sangam which was recognised as “The Fourth Tamil Sangam”.

 Pandiyan Kings patronised Tamil language in a great way.They created Sangams to develop the language.The "Mudhal Sangam" was established  in Southern Madurai which was situated  in the land Kumari by the river called "Kanni".Iraiyanaar was the first  scholar to preside over the Mudhal Sangam.Iraiyanaar,then popularly came to be known as"Thiripuram Eriththa Virisadaik Kadavul".   
  
        Later, the capital was shifted to "Kabaadapuram" due to sudden and violent change in nature.This place was on the banks of river "Kumari"  which is situated to south of Kanyakumari.The second Tamil Sangam or "Idai Sangam" is said to have been  held in Kabaadapuram.Lord Muruga, who presided over this Idai Sangam hence came to be known  as "Kundram Erintha Kumaravel".The famous epic "Tholkappiyam" was written during this period.  
   
         The Pandiyan Kings then shifted their capital to present Madurai, after a debacle.The third Tamil Sangam or "Kadai Sangam" was held here.The great Literary Compositions like "Ettuththogai" and "Paththu Paattu" belong to this period.Lord Shiva performed his "Thiruvilayaadals" with Tharumi and Nakkeerar during this "Kadai Sangam" period. Many works belonging to "Pathinen Kizh Kanakku" were composed during this period.Tamil literature reached its glory during this period.This period is an epoch in the history of Madurai.  
          Madurai was under the Jains from 4th to 7th Century.It was during this period, the great works like "Aym Perum Kaapiyam" and "Aym Sirum Kaapiyam"  were written.The Jains formed another Sangam during this period under the leadership of a eminent  scholar by  name "Vajra Nandhi".So, this Sangam was named after the scholar and was referred to as "Vajra Nandhi Tamil Sangam".This Sangam, however was not the fourth Tamil sangam as it lasted only for a short period.  
  
         Then, Madurai was under the control of Turkish kings.After their period, Madurai went  into the hands of Telugu Nayaks. Nachchinaarkkiniyar wrote comments on "Tholkaapiyam" and other sangam works during this period.Some of the important Personalities are Swaminatha Iyer, Thamotharan Pillai and Nachchinaarkiniyar.Many Tamil literature works which remained obscure were brought into light by  the efforts of  Swaminatha Iyer and many others. A Tamil Sangam was formed by Prince Paandi Thurai Thevar and other scholars which was the fourth Madurai Tamil Sangam.

வியாழன், 10 செப்டம்பர், 2009

curses may become blessings (sabangalum varangal agalam)சாபங்களும் வரங்கள் ஆகலாம்.

a small story written in Tamil...certain qualifications are cursed by the family. but they are necessary for certain jobs. read this and know how.....


சாபங்களும் வரங்கள் ஆகலாம்.


ஏன்டா அதுக்குள்ளே எந்திரிச்சுட்டே ? போறுமா! அம்மா கேட்டாள்

போரும்மா, வயறு சரியில்லே!

ஏன்டா வயறு சரியில்லையா இல்லை மனசு சரியில்லையா? எங்கிட்ட ஏன் பொய் சொல்றே. என்ன நடந்துதுன்னு நீ இப்போ வயத்தைக் காயப்போடுராய் உன் அப்பா என்ன அப்படி அதிசயமாய் திட்டிட்டார், தினம்தான் திட்டறார். நீ அந்த பாலாய்போன டிகிரியை வாங்கி வந்த நாள் அன்னைக்கு வாழ்த்தினதொடு சரி. மருநால்லேர்ந்து திட்டிண்டுதான் இருக்கார். வயத்துக்கு வஞ்சனை பண்ணாமல் ஒழுங்காய் இன்னும் இரண்டு தோசை தின்னு,

அம்மா உன்னால் மட்டும் எப்படி இப்படி இருக்க முடிகிறது. அதனாலதான் கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் என்கிறார்களோ. அவன் கலங்கிய கண்களோடு அவளைப் பார்த்தான். ஏற்கனவே புகையின் நடுவில் மங்கலாய் தெரிந்த அம்மா இன்னும் மங்கலாய் தெரிந்தாள்.

முரளி இங்க பாரு, இப்ப எதுக்கு மனசப் போட்டு வேதனைப் படுத்திக்கிராய். உன்னோடு படிச்ச குழந்தைகள்ள முக்கால் வாசிப்பேர் உன்னை மாதிரித்தான் வேலை கிடைக்காம போஸ்ட் ஆபீசும் லைப்ரர்யுமாஅலைந்து கொண்டு இருக்கிறார்கள். நீயும் பேங்க் பரீட்சை இன்சூரன்ஸ் பரீட்சை என எழுதிக்கொண்டு தான் இருக்கிறாய். பெயிலாறது கூட கிடையாது. எல்லாம் பாசாயிண்டுதான் இருக்கே. அப்புறம் நடக்கிற இண்டர்வியுவுலதான் உயரமான மலை எது? பள்ளமான கடல் எது? ன்னு இரண்டு அபத்தக் கேள்விகளா கேட்டு வீட்டுக்கு அனுப்பிர்ரன். அப்புறம் அடுத்த வருஷம் பரிச்சைக்கு கூப்பிடறபோது தான் தெரியறது. போன வருஷம் கோவிந்தான்னு. அதுக்கு நீ என்ன பண்ணுவே. தப்பு உன்மேல இருந்தா இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டியதுதான். செய்யாத தப்புக்கு ஏன் அழறே? எல்லாம் நேரம் வரப்போ தானே வரும்.

அம்மா அவன் தலையைத் தொட்டாள். அவன் முழுவதும் உடைந்தான்.

அம்மா நான் ஒன்னும் வேலை கிடைக்கலைன்னு அழலை. அப்பா எப்போ பார்த்தாலும் நான் சாப்பிடறதை பத்தி மட்டும்தான் திட்டறார். தண்டசோறு, எருமைமாடு, மூணு வேலையும் முழுங்கிட்டு ஓட்டச் சிவிங்கி மாதிரி வழங்திருக்கானே தவிர கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா பாரு. நாள் பூராவும் ஊரைச் சுத்திட்டு கொட்டிக்கிரதுக்கு மட்டும் வீட்டுக்கு வந்துர்ரான். என்று எப்ப பாத்தாலும் சாப்பாட்டைப் பற்றி தான்மா திட்டுறார். அதான்மா என்னால பொறுக்க முடியலே. எனக்கு மட்டும் வேலைக்கு போகனும்னு ஆசை இல்லையா என்ன ? இல்லை காலம்பூராவும் அப்பா சம்பாத்யத்திலேய ஓடிடும் னு நினைக்கிறேனா இல்லையே அப்பாவுக்கு இன்னும் நாலைந்து வருசம்தான் சர்வீஸ்னு தெரியும்மா, ஆனா நான் என்ன பண்ணுவேன் ? உயர்த்தப்பட்டவர்கள் , அது, இது ன்னு இந்த கவர்ன்மெண்டே ஆயிரத்தெட்டு பிரிவுகளை உண்டாக்கி நாளைக்கு ஒரு சட்டம்னு உண்டாக்கிகிட்டு இருக்கிறப்போ நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினாக்கூட நாங்கல்லாம் தெருவிலே நிற்க வேண்டியதுதான் பிட்சை எடுக்க போக வேண்டியதுதான் .. ஒருவேளை இந்த கவர்ந்மேண்டோட ஆசை அதுதானோ என்னமோ. எனக்கு அதெல்லாம் கூட கவலை இல்லேம்மா. அப்பா ஒரு பள்ளிக்கூட வாத்தியாரா இருந்துகொண்டு இப்படி பிரச்சினைகளை நிதர்சனமா பாக்காம ஏதோ நான்தான் வேணும்னே வேலைக்குப் போகாம திண்ணையிலே உட்கார்த்திருக்கிரமாரி திட்டறதுதான் என்னாலே தாங்க முடியலே.


இந்தக் குழந்தைக்குதான் இந்தச் சின்ன வயசிலேயே எவ்வளவு ஏமாற்றம் தவிப்பு . எங்கேயாவது காலூன்றி வேரூன்றி நிர்கமாட்டோமான்னு இது தவிக்கிற தவிப்பும் , அரசாங்கச் சட்டமும் சமுதாய மாற்றமும் பெருகி வரும் வெள்ளமாய் வேரோடு பறித்துப் போட்டு இந்த இளங்கன்றுகளை மெது மெதுவாய் சாகடித்துக்கொண்டு இருப்பதும் ஒன்றும் நல்லதாய் தெரியலையே. காலம் காலமாய்த்தான் ஜனத்தொகை பெருகிண்டு இருக்கு. திடீர்னா பெருகிடுத்து. இந்த அரசாங்கமெல்லாம் மொத்த மொத்தமாய் கணக்கு போட்டுப் பார்கிறதுதான் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணமோ என்று தோன்றுகிறது. அந்தக் காலத்திலே யார் இப்படி கணக்கு பார்த்துண்டு உட்கார்ந்திருந்தா. எனக்கு கல்யாணம் ஆறப்போ இவர் எட்டாம் வகுப்பு படிச்சுண்டிருந்தார். என்ன வேலை கிடைக்கும்னு நம்பி எங்கப்பா இவருக்கு கட்டிக் கொடுத்தார். அப்போல்லாம் யார் இப்படியெல்லாம் கவலைப்பட்டா. ஏதோ இவரே வயலை வித்து வந்த காசிலே ஒரு ட்ரைனிங் முடிச்சுட்டு வாத்யாராய் ஆனார். இந்தோ முப்பது வருஷம் ஓடிப் போச்சு. இவனோட வயசுலே இவங்கப்பாவுக்கு இரண்டு குழந்தை ஆயிடுத்து. இவனும் ராஜாவும். இன்னைக்கு என்னடான்னா வாழ்க்கையின் முதல் படியிலேயே இவன் தடுக்கி விளுந்திண்டு இருக்கான். இவனுக்கு என்னைக்கு வேலை கிடைச்சு எப்போ கல்யாணம் ஆஹி குடும்பம் குட்டின்னு ஆகப்போறானோ தெரியலையே.



என்னம்மா என்னைச் சொல்லிட்டு நீ விட்டத்தை பார்த்துண்டு உட்கார்ந்திட்டே. நான் போய் அப்பா திட்டின அந்த அட்வர்டைச்மைண்டை பார்த்துட்டு அப்படியே போஸ்ட் ஆபீசும் போயிட்டு வந்திர்றேன்.

சாமிநாதா இந்தக் குழந்தைக்கு ஒரு வழியைக் காண்பிடாப்பா. அம்மா சொல்லிக் கொண்டிருந்தபோது அந்த ஆறரை அடிக் குழந்தை ரோட்டில் போய்க் கொண்டிருந்தது.


*********
ஏண்டி முரளி எங்கே காணோம் சாப்பிட்டுக்கொண்டே கணேசன் கேட்டார்.

காலையிலேயே அரை குறையாய் சாப்பிட்டுட்டு லைப்ரரி போறேன்னு போனவன்தான் இன்னும் காணோம்.

எங்கேயாவது ஊரைச் சுற்றிக்கொண்டு இருப்பான் தடிக்கழுதை.

ஏன்னா நான் ஒன்னு சொல்வேன் கேட்பேளா.

என்ன?

இனிமே அவனை தடிக்கழுதை எருமை மாடு ஓட்டச்சிவிங்கி ன்னு ஊர்ல இருக்கிற பிராணி பேரெல்லாம் சொல்லி திட்டாதீங்கோ. அவன் ரொம்ப மனம் வேதணைப் பட்டுப் போயிருக்கான். காலையிலே கூட சரியாச் சாப்பிடாம அழுதுகொண்டே இருந்தான். நான்தான் சமாதானம் பண்ணி அனுப்பி வைச்சேன். அந்த பேப்பர் என்ன ஓடியா போயிடறது. இரண்டு நாள் லேட்டாய் அப்ளை பண்ணினால்தான் என்ன?

ஓஹோ , கழுதைக்கு கோபம் வந்திருச்சோ.

இப்பத்தானே சொன்னேன், அதுக்குள்ளே திட்டறேலே.

சரி,சரி, நீ ரொம்ப செல்லம் கொடுத்து அவனைக் குட்டிச்சுவராய் ஆக்கிட்டே அவ்வளவுதான் சொல்வேன் . கணேசன் எழுந்தார்.

நீங்க ஒன்னும் உங்க கோபத்தை சாப்பாட்டின் மேலே காட்டவேண்டாம். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இது ஒன்றிலே தான் ஒற்றுமை.

*********


முரளி அன்று மாலையும் வரவில்லை. சின்னவன் ராஜாவும் தங்கைகள் உமாவும் ராணியும் ஊரெல்லாம் தேடினர். மறுநாள் விடிவதற்குள் ஊருக்கே தெரிந்துவிட்டது.

ஏம்பா நம்ப வாத்தியார் பையன் ஊரை விட்டு ஓடிபோயிட்டனாமே.

வாத்தியார் ஸ்கூல் பசங்களேயே கழுதை எருமைன்னுதான் திட்டுவார். வீட்டுலேயும் அப்படித்தான். பயல் ரோசம் வந்து ஓடிப்போயிட்டான் போலேருக்கு. அவர்தான் என்ன பண்ணுவார் பாவம். நாளும் வளர்ந்த குழந்தைகள். இருக்கிற கோபம் வாயிலே வந்துர்றது. அதுக்காக படிச்ச பையன் இப்படி பண்ணலாமோ.

மூன்று நாள் பார்த்துவிட்டு போலீஸ் ஸ்டேசன்லே புகார் பண்ணினார் கணேசன்.

கணக்கு வகுப்பு. வாத்தியார் மனம் வெம்பிய மாம்பிஞ்சாய் வேதனையில் இருந்தது.

ஆருனாளாச்சே இன்னும் ஒரு சேதியும் காணலையே கடவுளே.


சார், சார், ஆறுநாள் இல்லே சார் பதினாறு நாளுக்கு வட்டி போடணும் ,புரியாத பையன் ஒருவன் புலம்பினான் எதிரில்,

சார், உங்களுக்கு ஒரு லெட்டர், பியூன் பெருமாள் கொடுத்துவிட்டுச்சென்றான் .

முரளிதான் என்பதை முகவரியே சொல்லிற்று.

அன்புள்ள அப்பாவிற்கும் அம்மாவிற்கும்

முரளி வணக்கம் பல.

உங்களையெல்லாம் ஆறேழு நாட்களுக்குமேல் தவிக்க வைக்க விரும்பாமையால் இந்த ஆர்மி காம்பிற்கு வந்த அன்றே இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.


இந்தக்கடிதத்தை உடனே எழுதி விடவேண்டும் என்று என் மனம் தவித்தாலும் வெகுதூரம் விலகிய பிறகு இந்தக்கடிதத்தை நான் எழுதினால்தான் நானாக தேடிக்கொண்ட இந்த ஆர்மி வாழ்க்கைக்கு உங்கள் பாசம் தடை ஆகாமல் இருக்கும் என நானே ஒரு நாலைந்து நாள் விலங்கிட்டுக்கொண்டேன்.

திருச்சி ரெக்ரூட் மென்டில் செலக்ட் ஆன உடனேயே இந்தக் கடிதத்தை நான் எழுதி இருந்தால் சென்னைக்கு துரத்தி வந்து என்னைத் தடுத்து விடுவீர்கள் என்பதால் ஆறு நாட்கள் உங்கள் வேதனையை அதிகப் படுத்தியதற்கு என்னை மன்னித்து விடுங்கள்.

எந்த அதிகப்படியான உயரமும் வளர்ச்சியும் உங்களிடமெல்லாம் எருமைமாடு என்றும் ஓட்டச்சிவிங்கி என்றும் அர்ச்சிக்கப்பட்டதோ, அதுவே ஒரு குவாளிபிகேசனாக அந்த ரெக்ரூட் மென்ட் அதிகாரிகலாலே ஒரு புன்னகையால் அங்கிகரிக்கப்பட்டபோது நான் சற்று மேலும் வளர்ந்தேன்.


சிபார்சுகளுக்கும் ரிசர்வேசன்களுக்கும் நடுவே என் பட்டங்கள் பயன்படாமல் இருந்த காலம் போய் திட்டப்பட்ட காரணங்களே சிபார்சுகலாய் நின்றபோது நான் திகைத்துத்தான் போனேன்,

இதோ இந்த பனி மலைகளும் யூகலிப்டஸ் மரங்களும் என் முன்னே பறந்து விரிந்து கிடக்கும் இயற்கையும் என் உயரத்தை அங்கிகரித்து சிரிப்பதாய் நான் உணர்கிறேன்.


அம்மாவிற்கு என் நமஸ்காரங்கள்

ராஜா உமா ராணிக்கு என் ஆசிகள்.

அன்புடன் முரளி


*******
யாரையுமே யாருமே சரியாய் புரிஞ்சுக்கிறதே இல்லே. யார் யாரைத் திட்டினா? அங்க பள்ளிக்கூடத்திலே அறுபது பயல்களோட கத்திப்புட்டு வீட்டுக்கு வந்தா இவன் அப்ளிகேசன் போடலை, அட்ரஸ் சரியில்லை, ஆபிஸ் சரியில்லை ன்னு எதையாவது உளறிண்டு இருந்தால் கோபம் வருமா வராதா. வயத்தெரிச்சலில் நாலு வார்த்தை வந்துர்றது.

கோழி முதிச்சு குஞ்சு முகம் வாடிருமா என்ன. எங்கேயாவது எப்படியாவது நன்னாயிருந்தால் சரி. இவதான் கொஞ்சம் அழுவா. ஏதோ நாளைக்கே துப்பாக்கியை தூக்கிக்கொண்டு சண்டைக்குப் போயிருவான்கிற மாதிரி. கொஞ்சம் சமாதானம் பண்ணனும்.

பர்மிசனில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்த வாத்தியார் சைக்கிளை வேகமாய் மிதித்தார்.


***********

be in one place (oridam Iru)

be in one place.
Be loyal to you yourself. It may help in your own life when the time comes.

ஓரிடம் இரு

டேய் கருப்பையா மாட்டு வண்டியை எடுத்துக்கிட்டு மேட்டுப்பட்டி போய் அந்தக் கரகாட்டம் ஆடுற சொர்னாவைக் கூட்டிக்கிட்டு வாடா. என்றார் வேலுசாமி மீசையைத் தடவி விட்டுக்கொண்டே.


எதிரே உட்கார்ந்திருந்த எனக்கு தூக்கிப் போட்டது. ஐம்பதைத் தாண்டியும் இந்த ஆசாமி ஏன் இப்படி ஆட்டம் போடுகிறார். என்று நினைத்துக்கொண்டேன். தர்மகர்த்தா என்றால் தர்மத்தை காப்பவர் என்று அர்த்தம் அல்லவா. லேசாய் சிரிப்பு வந்தது.

தம்பி என்ன ஒரு மாதிரி முழிக்கிறீங்க. நானும் வந்ததிலிருந்து பார்த்துகிட்டிருக்கேன். சிகரெட் தான் குடிக்க மாட்டேன் னுட்டீங்க. டிரிங்க்சும் வாங்கி வந்ததைஎல்லாம் நானே குடிச்சாச்சு. இப்ப சொர்னாவைக் கூட்டி வான்னதும் பேய் முழி முழிக்க ஆரம்பிச்சுட்டீங்க. இந்த இருபதும் சொச்சத்திலே ஏன் தம்பி இப்படி சாமியார் மாதிரி இருக்கீங்க. அவர் கட கடவென சிரித்தார்.

நான் வானத்து நிலவையே பார்த்துக் கொண்டிருந்தேன், அருகம்புல் ஓரத்தில் ஒட்டிக் கொண்ட பனித்துளியை க்ளோஸ் அப்பில் காட்டுவது மாதிரி அந்த நிலா தென்னை ஓலையின் ஒரு கீற்றில் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. மணி எட்டு இருக்குமோ. நேற்றோ இன்றோ பௌர்ணமியாய் இருக்க வேண்டும். வயல் காற்று உர வாசனையோடு ஜில்லென்று முகத்தில் அடித்தது.





நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் களத்து மேடு என்கிற கதிர் அடிக்கிற இடம். சுற்றிலும் வயல். கீழண்டைப்புரத்தில் ஒரு பெரிய கேணி. கேணியை ஒட்டி இரண்டு ரூம் கட்டி அதில் ஒன்றில் மோட்டார் இருந்தது. வயல் தர்மகர்த்தாவுடையதுதான். ஏன் ஊரே அவருடையதுதான்.


நான் தொல்பொருள் ஆராய்ச்சியாளன். இங்கே கிராமத்துக் கோயிலில் பழைய கல் வெட்டுக்கள் இருப்பதாய் கேள்விப் பட்டு சென்னையிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு தர்மகர்த்தா கொடுக்கும் அன்பான உபசரிப்புத்தான் சிகரெட் இத்யாதிகள்.

ஒரு வேலை நான் சாமியார் மாதிரிதான் இருக்கிறேனோ. கல்லூரி நாட்களிலேயே எனக்கு புத்தகப்புழு என்றுதான் பேர். இப்போதும்கூட கையில் விவேகானந்தரோ ராமகிருஷ்ணரோ தான் இருக்கும். அப்படி ஏதும் இல்லா விட்டாலும் கூட நிலவுதான் என் நண்பன். நல்லவன். மௌனமானவன். எல்லாக் காரியங்களுக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று சொல்கிறதே கீதை , இதற்கும் ஏதேனும் காரணம் இருக்கும்.

தூரத்தில் வில்வண்டி வருவது நிலவொளியில் லேசாய்த் தெரிந்தது.

தம்பி, இருபது முப்பது வருசமாய் இது பழகிப்போச்சு தம்பி. சுற்று வட்டார கிராமங்களிலிருந்து எனக்கு எப்போதும் கூட்டிக்கிட்டு வருகிறவன் கருப்பையாதான். சின்ன வயசிலே அப்பா இருந்த காலத்திலே சினிமாவுக்குப் போறதாச் சொல்லிட்டு இப்படி எங்கேயாச்சும் போய் விடுவேன். அப்பா காலமானதற்கு பிறகு நானே பெரிய தலைக்கட்டாய் ஆனதற்கு அப்புறம் இருந்த பயமும் போச்சு. எல்லாம் இந்த வயல் வீட்டிலேதான். அவர் மீண்டும் சிரித்தார்.

அந்த சிரிப்பு எனக்கு பிடிக்க வில்லை. பிரம்மச்சரியத்துக்கும் சாமியாருக்கும் வித்தியாசம் தெரியாத இந்த ஆசாமியை என்ன செய்வது. இவர் என் இந்த வயசில் இப்படி இருக்கிறார். தான் செய்வது தவறு என்று இவருக்கு தோன்றாதோ. எதிரில் ஒரு இருபது வயது பையன் இவை எதுவும் தேவை இல்லை என்று உட்கார்ந்திருக்கிறானே நம்மால் முடியவில்லையே என்று அவமானமாய் இருக்காதோ.

வில்வண்டி களத்தில் வந்து நின்றது. பின்பக்கமாய் ஒரு பெண் இறங்கினாள். பக்கத்தில் வந்ததும் வேலுச்சாமியை பார்த்து ஒரு பழகிய சிரிப்பையும் என்னைப் பார்த்து ஒரு அறிமுகச்சிரிப்பையும் உதிர்த்தாள். நான் என் கால்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தம்பி ரொம்ப வெட்கப் படுது என்றாள்.


வேலுச்சாமி வயல் பக்கமாய் எழுந்து போனார்.

வண்டியிலே வரும்போதே கருப்பையா சொல்லிச்சு. சார் ரொம்ப சின்னப் பையனாய் இருக்கார்னு. ஆசையாய் வந்தால் நீ இப்படி இருக்கியே. என்றாள்.

எனக்கு ஏனோ எச்சில் இலை ஞாபகம் வந்தது. உடம்பெல்லாம் கம்பளி பூச்சி ஓடியது.

நிலவு இப்போது தென்னை ஓலையை விட்டு விட்டு அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது.

எனக்கு வேண்டாம். என்று சொல்லி விட்டு சேரில் சாய்ந்தவாறு கண்களை மூடிக் கொண்டேன்.

கண் திறந்து பார்த்தபோது நிலவு உச்சியில் இருந்தது. அவள் இல்லை. வேலுச்சாமியும் இல்லை. கருப்பையா வில்வண்டி பக்கத்திலேயே வைக்கோல் பரப்பித் தூங்கிகொண்டிருந்தான்.

உச்சி நிலவு போல் மனமும் தெளிவாய் இருந்தது. தூங்கிப் போனேன்,

சுளீர் என்று வெயில் அடித்து எழுந்தபோது வேலுச்சாமி எதிரில் உட்கார்ந்திருந்தார். குளித்து சுத்தமாய் வீபூதீ அடித்திருந்தார். நேற்றுப் பார்த்த வேலுச்சாமியா இவர். வில்வண்டியையும் கருப்பையாவையும் காணோம்.

தம்பி, மோட்டார் ஓடுது. போய் குளிச்சுட்டு வாங்க. வீட்டில் போய் சாப்பிட்டுட்டு அப்படியே கோவிலுக்கும் போயிட்டு வரலாம்.

வீடு பெரிய வீடாய் கல் வீடாய் இருந்தது. எட்டு சுற்றுக்கட்டு வைத்து கட்டிய வீடு. இட்லியைச் சாப்பிடும்போது முற்றத்து வெயில் இரண்டு முறை இலையைத் தொட்டபோது நகர்த்திக் கொண்டேன். சூரியனுக்கும் பசிக்குமோ. வெயிலுக்காக நான் இலையை இழுப்பதை பார்த்து அந்த அம்மாள் லக்ச்மிகரமாய் சிரித்தார்கள். முகம் தெளிவாய் இருந்தது. தன் கணவரைப்பற்றி ஒன்றுமே தெரியாதோ இவர்களுக்கு. அல்லது எல்லாம் தெரிந்தும் தலைக்கு மேலே போய் விட்டது என்ற நிலையில் உள்ள அமைதியோ.

கல்யாணி வெயில் வராம இலையை வடக்குத் திண்ணையில் போட்டிருக்கலாமில்லே என்றார், வீடு அமைதியாய் இருப்பதைப் பார்த்து பிள்ளைகள் எங்கே என்றேன். அம்மா வேகமாய் உள்ளே போனதில் கோபம் தெரிந்தது.

என் கண்களை பார்க்க முடியாமல் வேலுச்சாமி தலை குனிந்து கொண்டு "அதுதான் ஆத்தா இன்னும் தல்லே" என்றார். நான் கேட்டிருக்கக் கூடாதோ. தராத காரணம் இவருக்குத் தெரியாதா என்ன?

கோவிலுக்கு நடந்தோம். பருத்திக்காட்டுக்கு நடுவே சின்னக் கோவிலாய் இருந்தது. சுற்று மண்டபத்தில் ஆல் அரசு வேம்பு என ஒரே காடாய் இருந்தது. கதவு இல்லை. உள்ளே காளி ஒன்று கையில் உள்ள சூலத்தால் கீழே விழுந்து கிடக்கும் ராஜாவைக் கொல்வதுபோல் உக்கிரமாய் நின்று கொண்டிருந்தது. சுற்றுச் சுவர் பூராய் ஒரே கல் வெட்டாய் இருந்தது. பல்லவர் கால கோயிலாய் இருக்கலாம் .

ஆத்தா பேரே கொல்லும் காளிதாங்க என்றார்.




இவையெல்லாம் வாழ்ந்த தெய்வங்களாய் இருக்கும். அரசனோ பிறரோ மிகவும் முறை கேடாய் ஒழுக்கம் கெட்டுப் போகும்போது ஒரு பெண் கோபம் கொண்டு கொலையும் செய்திருக்கலாம். அந்த முயற்சியில் அவள் இறந்தும் போயிருக்கலாம். ஊரார் அவளை வணங்கும் போது அவள் நாளடைவில் தெய்வமாகிறாள். மணப்பாறையில் இதே போல் ஒரு காளி இருக்கிறது. அது தன் மடியில் ஒரு அரசனைப் போட்டு வயற்றைக் கிழித்து குடலைத் தின்பதுபோல் உட்கார்ந்திருக்கிறது. அதன் அருகே ஒரு பெண் ஒரு கைக் குழந்தையோடு நிற்கிறாள். கற்ச்சிர்ப்பம் இல்லை சுதை வேலை. நான் அந்தக் கோயிலுக்கு போனபோது அப்போதுதான் கும்பாபிசேகம் பண்ணி பெயிண்ட் எல்லாம் அடித்து வைத்திருந்ததால் குடல் வாயெல்லாம் ஒரே சிகப்பாய் தத்ரூபமாய் இருந்தும் தூக்கி வாரிப் போட்டது. அங்கே உள்ளவர்களுக்கு அதன் வரலாறோ அந்தக் குழந்தையும் தாயும் என்ன என்றோ சொல்லத் தெரியவில்லை. அதுவும் ஏதேனும் வாழ்ந்த தெய்வம்தான் என்றேன்.

தம்பி நான் சின்னப் பிள்ளையிலேர்ந்து இந்தக் கோயிலுக்கு வந்துகிட்டு இருக்கேன், இப்ப நீங்க வந்து வயத்தைக் கலக்குறீங்களே. என்றார்.

நீங்கள் பயப்படவேண்டியவர் தான் என நினைத்துக் கொண்டேன்.

அந்தக் கோயிலில் பத்து நாள் வேலை இருந்தது. போட்டோக்கள் எடுத்து, கல் வெட்டுக்களை படிவம் எடுத்து குறிப்பெழுதி பத்து நாள் போனது. நடுவில் ஒருநாள் முன் மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

லேசாய் மழை தூறிக் கொண்டிருந்தது.

ஐயா வயல்ல பாத்தி கட்டி விதை நெல்லு போடுறோம். ஆனா சமயத்துலே மழை பெஞ்சு விதையைப் பூரா பக்கத்து வயல் வரப்பு காடு கரைன்னு அடிச்சுட்டுப் போயிரும் . ஒரு பத்து நாள் கழிச்சு பாத்தா அம்புட்டு நெல்லும் அங்கங்கே முளைச்சிருக்கும். ஆனா அதையெல்லாம் நம்ம நெல்லுன்னு உரிமை கொண்டாட முடியாது. நம்ப வயல்ல விளைஞ்சல்தான் நம்ம நெல்லுன்கிற உரிமை நமக்கு வரும். இதை நீங்க புரிஞ்சுக்கிட்டிங்கன்னா சரி. என்றேன்.

வேலுச்சாமியின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தது. தம்பி நீங்க பூடகமா என்ன சொல்றீங்கன்னு எனக்குப்புரியுது. நிச்சயமா ஒரு வழி ஆத்தா காண்பிப்பாள் . என்றார் சன்னதியைப் பார்த்துக்கொண்டே.

அப்புறம் மெட்ராஸ் வந்து ரிப்போர்ட் கொடுத்து விட்டு ஆபீஸ், பல்லவன், வீடு என அலைந்து கொண்டிருந்ததில் இரண்டு வருடம் வயலூரையும் மேட்டுப்பட்டியையும் வேலுச்சாமியையும் மறந்தே விட்டேன்.

ஒரு நாள் ஆபீஸில் வழக்கமான அரசாங்கக் காக்கிக் கவர்களுக்கு நடுவே பெரியதாய் ஒரு வெள்ளைக் கவரும் இருந்தது. கவரின் மேல் வளைகாப்பு சீமந்தப் பத்திரிக்கை என பிரிண்ட். பத்திரிகையோடு ஒரு சின்னக் கடிதமும் எட்டிப் பார்த்தது.

"தம்பி வயசுல சின்னப் புள்ளையான நீங்க முப்பது வருடமாய் இருட்டுல இருந்த என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தீங்க. எங்க ஊர்க்காளி கொல்ல நினைக்கிறது என்னைப் போன்றவர்களோட தீய பழக்கங்களைத்தான்னு சொல்லாம சொன்னீங்க. முப்பது வருசமா விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கிற எனக்கே என் வயல்ல விளைஞ்சால்தான் எனக்குச் சொந்தங்கிற உண்மையைப் புரிய வச்சீங்க.

இப்போ என் வீட்டு வயல்லே விளைஞ்சிருக்குங்கிற சந்தோசத்திலே உங்களுக்கு பத்திரிகை அனுப்பி இருக்கிறேன். வளைகாப்புக்கு அவசியம் வரவேணும்" என்றது.

சிரித்துக் கொண்டேன்.

என்ன விசேசம் என்றான் பக்கத்து சீட் நண்பன்.

இதுவரைக்கும் நம்ப டிபார்ட்மெண்டிலே கல்லுக்கும் மண்ணுக்கும் தானே ட்ரீட்மென்ட் கொடுத்துக்கொண்டு இருந்தோம். இப்போ ஒரு மனித மனதுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தேன், அதுதான் இந்த பத்திரிக்கை. என்றேன்.

இவன் எப்பவும் இப்படித்தான்யா ஏதாவது நிலா சூரியன் மனிதன் மனசு ன்னு உளறிக் கொண்டிருப்பான் என்றார் எதிர் சீட்டு ஆபிசர்.

*************************

introduction (arimugam)

introduction
when you help a person don't see the present condition of him but remember his past.

சார், ஒரு சேவிங்க்ஸ் பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணனும்.

ஐந்தாறு செக்குகளை பாஸ் செய்து டோக்கன் புக்கில் போட்டுக்கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். ஒரு பெண். எங்கேயோ பார்த்த முகம் போல் இருந்தது. சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை.




ஒப்பனிங் கார்டை எடுத்துக் கொண்டேன் .

அம்மா உங்க பேர் என்ன

ராணி

என்ன வேலை பார்க்குறீங்க

டான்சராய் இருக்கேங்க

எனக்கு பொறி தட்டினாற்போல் ஞாபகம் வந்துவிட்டது. இருபது வருடம் முன்னால் தஞ்சாவூர் கல்லூரியில் பீ .காம். முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். நான் பி.யு.சி.யில் வாங்கியிருந்த மார்க்குக்கு காமெர்ஸ் தான் கிடைத்தது. ஹாஸ்டல் வாழ்க்கை. என்னுடன் ரூமில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள்.

ஒரு நாள் லன்ச் அவரில் ஹாஸ்டலில் சாப்பிட்டு ரூமில் அரட்டை. ஹாஸ்டல் எதிரே இருந்த டீக்கடையில் ஒரு பெரிய போஸ்டர் ஒட்டியிருந்தது.

"கலையுலக ரசிகப் பெருமக்களே

கலைக் காவலர்களே (நாங்கள்தான்)

கலை விழா காண தவறாதீர்கள்

இன்றைய ஸ்பெசல் திருச்சி ராணியின் அற்புத நடனம்.

வருக, வருக, ஆதரவு தருக

என்றது

டேய் இன்றைக்கு ரூரல் எக்கனாமிக்ஸ் தாண்டா மத்யானம் கிளாஸ். அருவைடா கட் பண்ணிட்டு கலை விழா போவோம் என்றான் ஓர் நண்பன்.

கிளம்பி விட்டோம்.

ஹாஸ்டல் மாணவர்கள்தான் கலையைக் காப்பாற்றுவார்கள் என்று கலைவிழாக் கோஸ்டிக்கு தெரியாதா என்ன?



அங்கே பலூனைச் சுடுவது வளையம் போடுவது போன்றவற்றைத் தாண்டி ஸ்டேஜ் முன்னாள் போய் உட்கார்ந்தபோது எல். ஆர். ஈஸ்வரி பாட்டுக்கு ஒரு பெண் பட்டத்து ராணி பார்க்கும் பார்வையை பார்த்துக் கொண்டிருந்தது. சவுக்கால் அடித்தபோது ஹ ஹ ஹ ஹ என்றது. எங்கள் பக்கத்தில் ஒரு அறுபது வயது கிழவனார் எங்களை விட உயரமாய் குதித்துக் கொண்டிருந்தார். ஒரு இருபது முப்பது பாட்டுக்கு ஆட்டம் போட்டுவிட்டு (ஆடி விட்டு என்று சொல்லக்கூடாது) ஸ்டேஜிலிருந்து இறங்கி கீழே வந்து ஒரு பத்து பன்னிரண்டு பாஸ் போர்ட் போட்டோக்களை ரசிகப் பெருமக்களுக்கு கொடுத்து விட்டு ஓடி மறைந்தது. என் கையிலும் ஒன்று வந்து விழுந்தது. என் உயிரினும் மேலான ரசிகனுக்கு என்று எழுதி ஆட்டோ கிராப் வேறு. அந்த போட்டோ கூட இந்தியன் எக்கனாமிக்ஸ் புத்தகத்தோடு கிராமத்தில் பரணில் இருக்கலாம் . அப்புறம் பி.காம். பாஸ் பண்ணி பேங்க் வேலை கிடைத்து இரண்டு மூன்று இடம் மாற்றலாகி இப்போது திருச்சிக்கு வந்து இரண்டு வருஷம் ஆச்சு.

சார், என்ன சார் யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க,

நிகழ்காலத்திற்கு வந்தேன்,

ஒண்ணுமில்லேம்மா அக்கௌன்ட் ஓபன் பண்ணனும்னா யாராவது ஏற்கனவே கணக்கு உள்ளவங்க இன்ற டக்சன் அதாவது உங்களை தெரியும்னு அறிமுகப் படுத்தி கையெழுத்து போடனும்மா. யாரையாவது தெரியும்னா கையெழுத்து வாங்கியாங்க. கணக்கு ஆரம்பிச்சுரலாம்.

என்ன சார் இப்போ கையிலே ஏதோ கொஞ்சம் பணம் இருக்கு. சேமிச்சு வைச்சா எதிர்காலத்துக்கு உதவும்னு பார்த்தா கையெழுத்தைக்கொண்டா அது இதுங்கிரீங்களே.அந்தப் பெண் யோசித்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

டேய் என் சாலரி அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கு பாருடா என்று கேட்டவாறு வந்த டிராப்ட் சீட் பாஸ்கரன் அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்தான்.

அடடே ராணியம்மாவா என்னம்மா இந்தப் பக்கம் என்றான்.

சார் நீங்க இங்கதான் வேலை பார்க்குறீங்களா. கணக்கு ஆரம்பிக்கனும்னு வந்தேன் சார். அறிமுகப்படுத்தி கையெழுத்து வேணும்னு கேட்குறாங்க. அதுதான் யோசனையாய் நிற்கிறேன். என்றாள். பிறகு மெல்லிய குரலில் நீங்க ஏன் ஒரு மாதமாய் வீட்டுப் பக்கமே வரலே என்றாள்,

அப்பா அம்மா வந்திருக்காங்க அதான் என்றான் பாஸ்கரன்.

பாஸ்கர் அந்தப் பெண்ணைத் தெரியும்னா நீயே கையெழுத்துப் போடேன் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த நான் கேட்டேன்.

பாஸ்கர் என் காதருகே குனிந்து மெல்ல ஏற்கனவே என் தலையை உருட்டிக் கொண்டிருக்கீங்க. இப்ப இந்த பெண்ணுக்கு இன்ற டக்சன் போட்டுக் கொடுத்தா ஆபீஸ் மொத்தமும் கேலி பண்ணியே என்னைக் கொன்னுறுவீங்க. நம்மால் முடியாது.

மெல்ல நழுவி தன் சீட்டில் போய் உட்கார்ந்து விட்டான். நான் அந்தப் பெண்ணை பார்த்தேன். அவள் கண்களில் நீர் திரையிட்டிருந்தது. இவன் சொன்னது அவள் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.

நான் யோசித்தேன். ஓபனிங் கார்டை எடுத்து இத்தனை வருடமாய் தெரியும் என்ற இடத்தில் இருபது என்று எழுதி கையெழுத்தைப் போட்டு அந்தப் பெண்ணிடம் கொடுத்து அம்மா அந்த ஒன்று இரண்டு மூன்று என்று போட்டிருக்கும் இடத்திலெல்லாம் கையெழுத்தைப் போடுங்கள் என்றேன்.

அவள் அந்தக் கார்டை சிறிது நேரம் பார்த்தாள். யோசனையுடன் சார் என்னைத் தெரியுமா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்களா என்றாள்.

உங்கள் வீட்டுக்கு வந்ததில்லை. இருபது வருடம் முன் தஞ்சாவூர் கலை விழாவுக்கு வந்திருக்கிறேன் என்றேன்.

அவள் என்னை வியப்புடன் பார்த்தாள். அந்த முகத்தில் தெரிந்தது சந்தோசமா வருத்தமா என என்னால் கண்டுணர முடியவில்லை.

முத்துமாரி இங்கே வா இந்தக் கார்டை சேவிங்க்ஸ் ஆபிசரிடம் கொடுத்து கையெழுத்தை வாங்கு. ஐந்து நிமிடம் கழித்து

சேகர் இங்கே வாங்க. ஆபிசர் என்னை அழைத்தார்.

அருகில் போனதும் என்ன சேகர் தொழில் டான்சருன்னு போட்டிருக்கீங்க . இருபது வருடமாய் பழக்கம்னு எழுதிஇருக்கீங்க. ஏதாவது விசேசமா என்றார். அவர் முகத்தில் ஒரு குறும்பு தெரிந்தது.

என் நெஞ்சில் முள் குத்தியது.

சார் போன மாசம் வரை இவங்களோட பழகிக்கிட்டு இருந்த ஸஹ தோழர் இவங்களை அறிமுகப் படுத்த தயாராயில்லை. ஏன்னா அவர் காப்பாற்றி வச்சுக்கிட்டிருக்கிறதா நினைச்சுக்கிட்டிருக்கிற சுய கவுரவம் பாதிக்கும்னு அவருக்குத் தெரியும். ஆனா நான் இருபது வருஷம் முன்னாலே ஒரு சாதாரண ரசிகனாய் அதுவும் ஆயிரம் ரசிகர்களுக்கு நடுவிலே ஒருத்தனாய் இவங்களைச் சந்தித்தேன். என்னைப் பொறுத்த மட்டில் என் மனதில் இவங்க இன்னும் ஒரு டான்சராய்த்தான் இருக்காங்களே தவிர இன்றைக்கு நாம் பார்க்கிற இந்த நிலையிலே இல்லை. அதனாலே ஒரு டான்சராய்த்தான் ஒரு ரசிகன் என்கிற முறையிலே நான் அறிமுகம் செய்து வைக்கிறேன். இது தப்பா.

என் உணர்வுகள் என் முகத்தில் தெரிந்து விட்டன போலும்.

ஆபிசர் என்னை வியப்புடன் பார்த்தார், அவர் பார்வையில் இருந்த குறும்பு போய் என்னை அங்கிகரிப்பது தெரிந்தது.

**************

kantha sasti kavasam

kantha sasti kavasam (tamil devotional hymn) written in tamil for easy reading.
எனது ஆனந்த சக்தி கவசத்தை டிரான்ஸ்லிடரெட் பண்ணும் போது தான்
கவனித்தேன். நமக்கெல்லாம் குருவாய் தேவநேயப் பாவாணர் இருந்து
நமக்கு தந்த ஸ்கந்த சஸ்டி கவசம் நெட்டில் எல்லோரும் படிக்கும்படி
இல்லை என்று தெரிந்தது. யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன் என்று
வேறு ஒருத்தர் ஒரு பாரத்தில் எழுதியிருந்தார் . அதன் உள்ளே
போனபோது ஸ்க்ரிப்ட் டாட் காமில் போகச்சொல்லி வந்தது. போனால்
ஸ்க்ரிப்ட் டாட் காம் மில் உள்ளது ஐ பேப்பர் ஆய் உள்ளது. அதனை
காப்பி பேஸ்ட் செய்தல் இயலாது. அப்படியே பி டி எப் பார்மாட்டில்
டவுன்லோட் பண்ணினாலும் காப்பி பேஸ்ட் பண்ணும்போது

¸ó¾÷ ºŠÊ ¸Åºõ



என்று முருகன் மாறு வேடத்தில் வந்தது போல் வரும் .
என்னையாது ஜிலேபியைப் பிச்சுப் போட்டிருக்காங்க என்று விவேக்
விஜய்யிடம் சொல்வது போல் புலம்பி , வாழ் வாழ் என்று
கத்தாமல் வாழ்க கம்ப்யுட்டர் என்று சொல்லிவிட்டு இதோ எல்லோருக்கும்
பயன்படுமாறு எச் ட்டி எம் எல் பார்மாட் டில்
blogger வரும் நமது சகோதரர்களுக்காக
கீழே ஸ்கந்த சஸ்டி கவசம்.

அப்புறம் கொஞ்ச நாள் கழித்து யூனி கோட் கிடைத்து விட்டது.  டைப் அடிப்பதே ஈஸியாகி விட்டது.

 கவசம் முடிவதற்குள் உடம்பு மரக்கட்டை போல் ஆவதை அனுபவத்தில் உணரலாம்.)

பாட்டு முடிவதற்குள் பாதிப்பேர் சாமியாடுவார்கள் சந்தேகமேயில்லை
முருகன்னா சும்மாவா

இசைத் தட்டு முதலியவைகளில் கேட்காமல் புஸ்தகத்தில்லிருந்தே
நேரடியாக படிக்கும்போது இடை இடையே நிறுத்தாமல் வேகமாகச்
சொல்பவர்களுக்கு உடல் மரத்துப் போவதை அனுபவத்தில் உணரலாம்.
அட்ரினலின் குறைந்து அட்ரோபின் அதிகமாகி விட்டது என மகிழுங்கள்.



***********

துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம் ; நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்து ஓங்கும்;
நிஷ்டையும் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஸ்டி கவசந்தனை .

குரல் வெண்பா

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி

நூல்

நிலை மண்டில ஆசிரியப்பா

சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட
மையல் நடஞ் செயும் மயில் வாகனனார்

கையில் வேலால் என்னைக் காக்க என்று உவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதாலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக
நேச குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறு இடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரஹந பவனார் சடுதியில் வருக
ரஹந பவச ரரரர ரரர
ரிஹந பவச ரிரி ரிரிரி
விணபவ ஸரஹ வீரா நமோ நம
நிபவ சரஹந நிற நிற நிறென

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்ட இலங்க

விரைந்தெனைக்காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சவ்வும் உயர் ஐயும் கிலியும்
கிலியும் சவ்வும் கிளரொளி ஐயும்
நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் ரீயும் தனி ஒளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறு இடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணி சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூஷனமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்து அணி மார்பும்
செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீறாவும்
இருதொடை அழகும் இணை முழநதாளும்

திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடு டுடு டுடு டுடு டுடு டுடு டுடுடு
டகுடிகு டிகுடுகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேல் முந்து
என்றனை ஆளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதன் என்று

உன்திருவடியை உறுதிஎன்று எண்ணும்
என்தலை வைத்து உன் இணையடி காக்க
என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனை பெருவேல் காக்க

முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழு பதினாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பனைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நல்துணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்ரவேல் காக்க
அரை இருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்க தடையறத் தாக்க

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஸ் டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட
ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள் முடி மண்டையும்
பாவைகள் உடனே பலகலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டியப் பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டு அலறி மதி கேட்டு ஓட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிட கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு
குத்து குத்து கூர்வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணல் அது ஆக
விடுவிடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்து

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைகால் சிலந்தி
பற்குத்தரணை பரு அறையாப்பும்

எல்லாப் பிணியும் எந்தனை கண்டால்
நில்லாதோட நீஎனக்கு அருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணால் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
ஸரஹந பவனே சை யொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவன் ஒழி பவனே
அரிதிரு மருகா அமராபதியைக்

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா

கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பழனி பதிவாழ் பால குமாரா
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத்தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யான் உனைப் பாட
எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனை
பாடினேன் ஆடினேன் பரவசம் ஆக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

நேசமுடன் நான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன் அருள் ஆக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்

சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்

வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென்று அன்பாய்த் பிரியம் அளித்து
மைந்தன் என்மீது உன் மனம் மகிழ்ந்து அருளித்
தஞ்சம் என்ற அடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆச்சாரத்துடன் அங்கம் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது ஆகி
கந்தர் சஸ்டி கவசம் இதனை

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாருறு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய
அஷ்ட திக் குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப் பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்து அடி

அறிந்து எனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துனவாக
சூரபத்மாவை துணித்தகை அதனால்
இருபத்தேழ்வர்க்கும் உவந்தமிழ்தளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்

சின்னக்குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத்தாட்கொண்ட என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்ய தேகா போற்றி
இடும்பாயுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோர் போற்றி

மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் ஸரஹந பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ...

patience (porumai)


my song in Indian Bank magazine now for the world through net:


காலை:

பத்தே காலுக்கு உள்ளே வந்தவர்,
பத்திருபதுக்கு பதறித் தேடினார்;
"கால் மணி நேரமாய் காத்திருக்கிறேன்,
காணவில்லை கணக்குப் புத்தகம்;"
சமாதானம் சொல்லி சான்றுகள் உரைத்து,
சாந்தப் படுத்தி அனுப்பினோம் அவரை.

மாலை:

ஒரு மணி நேரம் ஒழுங்காய் நின்றும்
உள்ளே நுழைய ஒரு வழி இல்லை;
வெளியே வந்தார் ரசிகர் ஒருவர்,
சட்டை கசங்கி கண்ணாடி உடைந்து;

வந்ததும் உரைத்தார் வசனம் வீரமாய்
சுற்றி நின்றோரின் சோகத்தை கிளறி;
"காலையிலுருந்தே காத்திருக்கிறேன்,
சும்மா இல்லை சூப்பெர் ஸ்டார் படம்;
எப்போதும் பார்க்காமல் இருக்கவும் மாட்டேன்,
முதல் நாளே முதல் காட்சியில்;"

யாரந்த ரசிகர் தெரியத் திரும்பினேன்,
காலையில் வந்த அதே நண்பர்தான்.

english translation for the rest of the world


Morning…Bank counter:

Ten thirty he enters the Bank,
Scolding at us with a big bank,
One hour I have wasted;
But no pass book is entered;
Pacify him cool down him
By asking   sorry and excuse;
He left the bank in a hurry.Evening ….cinema counter….

Standing in the cinema theatre,
A big queue is already   there,
More than two hours waiting,
No hope for ticketing;
One man comes out with broken glasses
And  torn cloths;
Blabbering at us with a glee,
Super star film is not ordinary,
We can spent hours together
And even shed our blood
To get a ticket;
Who is that I turned to know
The  same man of the morning fight.

* photos are illustrative and not specific.


***********

செவ்வாய், 16 ஜூன், 2009

ஆனந்த சக்தி கவசம் தமிழ் பக்தி பாடல்

anantha sakthi kavasam tamil devotional hymn



இசைக் குழுவினர் இதனை தமிழில் பாடி மகிழலாம் .

ஸ்கந்த சஸ்டி கவசம் மெட்டில் பாடுங்கள் :


காப்பு

அழைப்போர்க்கு அல்லல் போம்; துயரம் போம்; மனதில்
வைப்போர்க்கு வாழ்வும் பெருகி வளம் ஓங்கும்
சித்தியும் சித்திக்கும் , அசோகர் அருள்
ஆனந்த சக்திக் கவசம் இதனை.

நல்லோர் துயர் தீர அசுரர் அழித்த
சக்தி அருள் நெஞ்சே குறி.

நூல்

நிலை மண்டில ஆசிரியப்பா


சக்தியை அழைக்க சடுதியில் வருவாள்
பக்தர்க்கு அருளும் பரமன் மனையாள்
பாதம் இரண்டில் கொலுசுகள் ஒலிக்க
கீதம் பாடும் கிண்கிணி சலங்கை .....004

பைய நடனம் செய்யும் பைந்தமிழ் எழிலாள்
கையில் சூலத்தோடு காக்க இங்கு வந்து
வருக வருக மலையாள் வருக
வருக வருக மாண்புடன் வருக .....008

எண்திசை வாழும் எண்மர் போற்ற
மண்தனை வளர்க்க சூலம் வருக
வளைக்கரம் வாழ்த்த வருக வருக
இன்பச் சிவனின் நினைவோள் வருக .....012

ஆறுமுகனின் அம்மா வருக
குங்குமம் அணிந்து கூடவே வருக
சிறந்த மகளே சீக்கிரம் வருக
சக்தியின் உருவே சடுதியில் வருக ....016

உமையவள் நீயே கிலி கிலி கிலி கிலி
அமைப்பவள் நீயே வழி வழி வழி வழி
வினைகள் அறுக்க வீரீ நமோ நம
கருணை வடிவே சரணம் சரணம் .....020

தசரதன் மகளே வருக வருக
அசுரரை அழித்த அம்மா வருக
எந்தனை ஆளும் எளிழோள் கையில்
பதினேட்டாயுதம் பாசாங்குசமும் ....024

கருணை விழிகள் கனிவுடன் திகழ
விரைந்தெனைக் காக்க விழியோள் வருக
ஐயும் கிளியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சவ்வும் உயிர் ஐயும் கிளியும் .....028

கிளியும் சவ்வும் கிலரொளி ஐயும்
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்
சக்தி நீயும் தனியொளி யவ்வும்
குண்டலி ஏறி குலமகள் வருக ......032

அன்னை முகமும் அருள் கூறும் அழகும்
செவ்வொளி நெற்றியும் நெடிய புருவமும்
பதினெட்டுக் கையும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவரத்ன சுட்டியும் .....036

எழில் சேர் செவியில் இலங்கும் குண்டலமும்
அன்பும் கருணையும் அருளும் நெஞ்சில்
பல்வகை மணியும் பதக்கமும் தரித்து
நல்வகை சேர்ந்த நவரத்ன மாலையும் ......040

உன்புகழ் பாடும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிருந்தியும்
முருகனின் மடியில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீறாவும் ......044

என் குகன் அமர்ந்த எழில் சேர் கால்களும்
சிறந்த கால்களில் கொலுசொலி இசைக்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகன .....048

நகநக நகநக நகநக நகன
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம்
ஸ்ரீம்ஸ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம் ......052

க்லீம்க்லீம் க்லீம்க்லீம் க்லீம்க்லீம் க்லீம்க்லீம்
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
உயிர்ச் சக்தி அவளே உள்ளே இருப்பாள்
முந்து முந்து முன்னாள் முந்து .....056

எந்தனை ஆளும் என்னுயிர் அம்மா
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவு
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதம் என்று .....060

உன் திருவடியை உறுதியாய் பற்றி
என்தலை வைத்தேன் இணையடி காக்க
என்னுயிர்க்கு உயிரே என் அம்மா காக்க
பண்புடை விழியால் என்னைக் காக்க ......064

அடியவன் வதனம் எழில் சூல் காக்க
சிகப்பு சேர் நெற்றியை சீர் சூல் காக்க
கலங்கும் கண்களை கருஞ் சூல் காக்க
செவிகள் இரண்டும் செஞ் சூல் காக்க .....068

நாசிகள் இரண்டும் நல் சூல் காக்க
பேசும் வாய்தனை பெருஞ் சூல் காக்க
முப்பத்திருபல் முனி சூல் காக்க
செந்தமிழ் நாவை செஞ் சூல் காக்க .....072

கன்னம் இரண்டை கதிர்சூல் காக்க
என்னிளம் கழுத்தை இனி சூல் காக்க
மார்பை ரத்ன வடி சூல் காக்க
சேர்ந்த நெஞ்சினை நேர் சூல் காக்க ......076

வடிசூல் இருதோள் வனப்புடன் காக்க
பிடரிகள் இரண்டும் பெரும் சூல் காக்க
அழகிய முதுகை அருள் சூல் காக்க
பளு பதினாறும் பரு சூல் காக்க .....080

வெற்றி சூல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுற செஞ் சூல் காக்க
அரை ஞான் கயிற்றை அருள் சூல் காக்க
ஆண் பெண் குறிகளை அழகு சூல் காக்க ......084

பிட்டம் இரண்டும் பெரும் சூல் காக்க
வட்டக் குதத்தை வல் சூல் காக்க
பனைத் தொடை இரண்டும் பரு சூல் காக்க
கணைக்கால் முழங்கால் கதிர் சூல் காக்க ......088

ஐவிரல் அடியினை அருள் சூல் காக்க
கைகால் இரண்டும் கருணை சூல் காக்க
முன்கை இரண்டும் முரண் சூல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க ......092

நாவில் சரஸ்வதி நற்துனை ஆக
நாபிக் கமலம் நல்சூல் காக்க
முப்பால் நாடியை முனை சூல் காக்க
எப்பொழுதும் என்னை எதிர் சூல் காக்க .....096

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக சூல் காக்க
வரும் பகல் தன்னில் வச்ர சூல் காக்க
அரை இருள் தன்னில் அரும் சூல் காக்க ......100

ஏமத்தில் சாமத்தில் எதிர் சூல் காக்க
தாமதம் நீக்கி சதுர் சூல் காக்க
காக்க காக்க கனக சூல் காக்க
நோக்கும் போதே நோய்கள் நீங்கும் .....104

தாக்கும் போதே தடைகள் தகரும்
பார்க்கும் போதே பாவம் அழியும்
பில்லி சூன்யம் பெரும்பகை அகலும்
வலிய பூதம் வாலாட்டும் பேய்கள் ......108

அல்லல் தருகின்ற அடங்கா முனிகள்
பிள்ளைகள் கொல்லும் பின்வீட்டு பேயும்
கொள்ளிக்கண் பேய்களும் குணங்கெட்ட பேய்களும்
பெண்களைத் தொடரும் பேதைப் பேய்களும் ......112

அடியனைக் கண்டால் அங்கேயே அழிந்திட
இரத்தக் காட்டேரி இறுமாப்பு படைகள்
இரவிலும் பகலிலும் எதிர் வரும் தீயரும்
கண்டதும் உண்ணும் காளியோடு அனைத்தும் .....116

விடாது தொடரும் வினை மிகு பேய்களும்
தண்டியம் செய்யும் சண்டாளர்களும்
என் பெயர் கேட்டதும் இடி விழுந்து நடுங்கிட
அறியாது வைக்கும் அற்பப் பொம்மைகள் .....120

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
கைகால் நகங்களும் மண்டை ஓடும்
பொம்மைகள் உடனே பானையில் வைத்த
வீட்டினில் வைக்கும் வினை பிடித்தோர்கள் .....124

பொம்மையில் ஆணியை அடித்தே வைத்து
காசு பணத்துடன் சோற்றையும் வைத்து
குங்குமம் ஜபித்து கூடவே வைத்தோர்
அடியேனைக் கண்டால் அலறி அழிந்திட ......128

பகையும் தீயோரும் வந்து வணங்கிட
எமனின் ஆட்கள் எழுந்து ஓடிட
பயந்து அழுது பாய்ந்து ஓடிட
மனமும் கலங்கி மறைந்து ஓடிட .....132

கற்களில் முட்டி கயற்றால் கட்டி
உடம்பெல்லாம் நோக உடனே கட்டு
எலும்புகள் உடைய எட்டி உதைத்து
கட்டும் கட்டில் கைகால் நொறுங்க .....136

அடிக்கும் அடியில் கண்கள் வெளிவர
சிறு சிறு துண்டாய் சீவிப் போடு
அரு அரு என்றே பகையை அறுத்திடு
சொருகு சொருகு சூலம் சொருகு .....140

நெருப்பு அவர்கள் நெஞ்சில் பற்றிட
எரியட்டும் நெருப்பு என்றென்றும் அங்கே
சூலத்தை எறிவாய் சூழ்ந்தது ஓட
புலிகள் நரிகள் பொல்லாத நாய்கள் .....144

எலிகள் கரடிகள் எல்லாம் ஓட
தேள்கள் பாம்புகள் சீயான் பூரான்கள்
பாழ் பட்டுப் போன பூச்சிகள் கடித்து
ஏறிய விஷமும் உடனே இறங்க ......148

காயங்கள் சுளுக்குகள் கதறும் தலைவலி
வாதம் காய்ச்சல் வலிப்பு நோய்கள்
சூலை சயம் குன்மம் சொரியும் சிரங்கும்
வலிகள் புண்கள் வயற்று நோய்கள் .....150

ராஜ பிளவைகள் ராத்திரி நோய்கள்
பூனை நாய் சிலந்திக் கடிகள்
பல்வலி அரணை ஆப்புக் கட்டிகள்
எல்லா நோய்களும் என்னைக் கண்டதும் ......154

கதறி ஓட கருணை புரிவாய்
அனைத்து உலகமும் அன்புடன் உறவாட
ஆண் பெண் அனைவரும் நட்பாக
நாட்டை ஆள்வோரும் நட்புடன் உதவ .....160

உன்னை நம்பி உன் பெயர் சொல்ல
சக்தியும் நீயே சகலமும் நீயே
திரிபுர சுந்தரி தினமும் நீயே
சப்தமும் நீயே சலனமும் நீயே .....164

விஷ்ணுவின் தங்கை வேந்தனின் மங்கை
தேவரைக் காக்க திரிசூல் எடுத்தாய்
மாந்தரைக் காக்கும் மகிமை அவளே
காலனை அழித்து ககனம் காப்பாய் .....168

எல்லோரையும் காக்க இப்போதே வருவாய்
தணிகையை ஆளும் சங்கரன் மனையாள்
காஞ்சி நகர் அமர் காமாக்ஷி தாயே
மதுரை அரசாலும் மாபெரும் அரசி .....172

கருக்காவூர் காத்த கருணைத் தெய்வம்
மாங்காடு அமர்ந்த மங்கையர்க்கரசி
காசியில் சிரிக்கும் விசாலாக்ஷி தாயே
கலைகளின் அரசி கலைமகள் என்றும் ....176

என்னிடம் இருக்க நான் தினம் பாட
என்னுள் இருக்கும் எந்தன் தாயை
பாடுவேன் தினமும் பைந்தமிழ் மொழியால்
ஆடினேன் பாடினேன் ஆனந்தத்தாலே ......180

கொஞ்சும் அழகுடன் குங்குமம் அணிய
பாழும் வினைகளும் பாவமும் நீங்கி
உன் அடி சேர உன் அருளாலே
அன்புடன் தருவாய் கல்வியும் செல்வமும் .....184

நல்ல வாழ்வும் நலமும் பிறவும்
சீரும் சிறப்பும் சித்திகள் பெருக
வாழ்க வாழ்க வளைக்கரம் வாழ்க
வாழ்க வாழ்க திரிசூல் வாழ்க ......188

வாழ்க வாழ்க மதுரைக்கு அரசி
வாழ்க வாழ்க வாழ்த்தும் சிவனுடன்
வாழ்க வாழ்க சிம்மம் ஏறினாள்
வாழ்க வாழ்க என் துயரங்கள் நீங்க .....192

ஏதேனும் பிழைகள் ஏதேனும் தவறுகள்
ஏதேனும் குறைகள் செய்திருந்தாலும்
பெற்றவள் நீதான் பொருப்பவள் நீதான்
தந்தை சிவன்தான் தாயும் நீதான் ....196

உன் பிள்ளை என்மேல் அன்பாய் இருந்து
உன் மகன் என்மேல் உயிராய் இருந்து
உன்னிடம் வந்தோர் உயர்ந்திட வழி செய்
ஆனந்த சக்தி கவசம் விரும்பியே ....200

காலையில் மாலையில் கவனமாய் தினமும்
நன்றாய் குளித்து நல் துணி அணிந்து
நினைவு மாறாது நிற்கும் நிலையில்
அசோக ஆனந்த சித்தன் அருளிய .....204

ஆனந்த சக்திக் கவசம் இதனை
சிந்தை ஒன்றாகி தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறுருக்கொண்டு
ஓதியே ஜபித்து சிகப்பும் அணிய .....208

எட்டுத் திக்குள்ள எண்மரும் அடங்குவர்
செயல்களில் எல்லாம் ஜெயத்தை தருவர்
எதிரிகள் எல்லாம் எப்போதும் வணங்குவர்
சூரியன் முதலோர் சூழ்ந்து உதவுவர் ......212

எப்போதும் என்றும் இளமையாய் வாழ்வர்
என்றும் பதினாறாய் எப்போதும் இருப்பர்
அன்னையின் கையிலுள்ள அருள் சூலத்தை
பாதையாய் வைத்து பயணம் செய்க .....216

கண்ணால் காண கடும் பேய் ஓடும்
தீயோரெல்லாம் தீய்ந்து கருகுவர்
நல்லவர் நெஞ்சில் நாளும் நிற்கும்
அல்லவர் தீயோர் அழிக்கும் சூலை .....220

எந்தன் உள்ளம் எந்நாளும் அறிந்து
வீரலக்ஷிமை விரும்பிடும் தினமே
சூரனை அழித்து துன்பம் நீக்கி
தேவர்களுக்கு தேனின்பம் தந்து .....224

காஞ்சிபுரத்தில் கடும் தவம் செய்த
செல்லக் கால்களில் சேர்வோம் இன்றே
என்னை ஆட்கொண்டு எந்தன் நெஞ்சில்
எப்போதும் இருக்கும் அம்மா போற்றி .....228

தேவர்கள் நெஞ்சில் வாழ்வாய் போற்றி
பரமனின் நெஞ்சின் மகிழ்வே போற்றி
அருள் மிகு அழகு அம்மா போற்றி
அரக்கரை அழித்த அன்பே போற்றி .....232

காமாக்ஷி போற்றி கருணை போற்றி
வெற்றி பெறுகின்ற சூலே போற்றி
திருமீயச்சூர் லலிதாம்பிகையே
ஸிம்ஹவாஹிநி சீரடி சரணம் .....236

சரணம் சரணம் அம்மா சரணம்
சரணம் சரணம் சக்தியே சரணம் ....238